பதிவு செய்த நாள்
11
நவ
2013
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நவ., 17 அன்று மாலை 6.15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடிக்கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றினர். நவ., 19 வரை தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருகிறார். நவ.,15ல் சைவசமய ஸ்தாபித வராலாற்று லீலையும், நவ., 17ல் மலைமேல் மகா தீபம், பட்டாபிஷேகம், நவ., 18ல் தேரோட்டம், நவ., 19ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.