பதிவு செய்த நாள்
14
நவ
2013
11:11
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் சாலைக்குமார சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தீர்த்தவாரியோடு நிறைவடைந்தது.நெல்லை ஜங்ஷன் சாலைக்குமார சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், ஊஞ்சல் திருவிழா என 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் பலன் தரும் தேவார திருக்கோயில்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் கந்தகுமாரின் பக்தி தொடர் சொற்பொழிவு, மீனா அருணாச்சலம், முருகன், ராமன் ஆகியோரின் சொற்பொழிவும் நடந்தது. மூர்த்தியின் பட்டிமன்றம், கிருத்திகா கணேஷ் சொல்லரங்கம், டவுன் சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடனம் நடந்தது. விழாவின் நிறைவு நாளில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் முரளிதரன், செயல் அலுவலர் அழகு லிங்கேஸ்வரி, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புலவர் கந்தகுமார் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.