அழகர் கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் நரசிம்மர் மிகவும் உக்ரமாகக் காணப்படுகிறார். அவர் தலைக்கு மேலாக உள்ள சிறு துளை வழியாக கோபக்கினி மேலே கிளம்பிச் செல்வதாக சொல்கின்றனர். அதை தணிப்பதற்கு தினமும் எண்ணெய், பால் தயிராலும் , நூபுர கங்கையாலும் விசேஷ திருமஞ்சனம் நடை பெறுகிறது.