கர்நாடக மாநிலம் ஹுப்ளி நகரில் கீதா மந்திர் என்ற கோயில் உள்ளது. இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் கடகோல ஸ்ரீ கிருஷ்ணா என்ற பெயரில், கையில் தயிர் கடையும் மத்துடன் காட்சி தருகிறார். கன்னடத்தில் கடகோல என்றால் மத்து என்று பொருள். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரைப் போலவே இவரும் திருக்கோலம் கொண்டுள்ளார். கோகுலாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அன்று புஷ்ப அலங்காரம், வெண்ணெய் அலங்காரம் என்று பலவித அலங்காரங்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் செய்கிறார்கள். தொட்டிலில் சிறிய அளவிலான ஸ்ரீ கிருஷ்ணர் விக்கிரகத்தைப் படுக்க வைத்து தாலாட்டவும் செய்கிறார்கள். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள புத்திகேமடம் எனும் ஸ்ரீராகவேந்திரர் மடத்தில், கோவர்த்தனகிரி மலையை குடைபோல தன் குட்டி விரலால் தூக்கிப்பிடித்த ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.