மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வரகடை கிராமத்தில் அன் னபூரணி அம்மையார் சமேத வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயில் மிகவும் சிதிமலடைந்திருந்தது. இதையடுத்து அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் நிதியுதவியுடன் கோயி ல் திருப்பணி செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 9 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற் று பூர்ணாஹூதியாகி கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 10: 15 மணியளவில் விமான மகாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகாபிஷேக ம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை திருப்புகலூர் பிரணதார்த்திஹர சிவாச் சாரியார் தலைமையில் திருஞானசம்பந்தம் சிவாச்சாரியார், கோயில் அர்ச்சகர் சோமசுந்தரசிவாச்சாரியார் ஆகியோர் செய்து வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.