காரைக்கால் அம்மையார் கோவிலில் அன்னதானக்கூடம் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2013 06:11
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் ரூ.8 லட்சம் செலவில் காரைக்கால் அம்மையார் நித்திய அன்னதானக்கூடம் திறப்பு விழா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் நேற்று ரூ.8 லட்சம் மதிப்பில் காரைக்கால் அம்மையார் நித்திய அன்னதானக்கூடம் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ.,நாஜிம் தலைமை தங்கினார்.காரைக்கால் அம்மையார் நித்திய அன்னதானக்கூடத்தை மலேசியா பக்தர் டத்தோ டாக்டர் ஷிமி சுமதி முத்து குஞ்சி திறந்து வைத்தார்.இவ்விழாவில் வாரியத்தலைவர்கள் கோவிந்தராஜ்,சுரேஷ்,கோயில்கள் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி மற்றும் தனி அதிகாரி ஆசைதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.