மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர்(வள்ளலார்)கோயில் உள்ளது. இக்கோ யிலில் ஐப்பசிமாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகி றது.உற்சவத்தை முன்னிட்டுநேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. காலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலை வதானேஸ்வரர், ஞானாம்பிகை அம்மன் திருமணக் கோலத்தில் மண்ட பத்தில் எழுந்தருளினர். தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சுவாமி, அம்பாள் திருக்கல் யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று திருமணக்கோலத்தில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் எழு ந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை சுப்ரமணி யசிவாச்சாரியார் செய்துவைத்தனர். இதில் கோயில் கண்காணிப்பாளர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்க ள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.