பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலை, மலைக்கொழுந்தீஸ் வரர் கோயில் மலையை, "தொல்லியல் மரபு சின்னமாக அறிவிக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, கற்கால ஓவியங்கள்; 10 க்கும் மேற்பட்ட சமணர் படுகைகள்; தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. பார்வதி, பரமேஸ்வரனுக்காக குடவறை கோயிலும் உள்ளது. இக்கோயில், கி.பி., 13 ம் நூற்றாண்டு வரை, பிரசித்தி பெற்றதாக இருந்துள்ளது. இதனால், இக்கோயிலை சுற்றுலா தலமாக அறிவித்து, கிரிவல பாதை அமைத்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தொல்லியல் சின்னம்: இம்மலையில், தொல்லியல் துறை, மதுரை மண்டல உதவி இயக்குனர் கணேசன் ஆய்வு செய்து, "தொல்லியல் மரபு சின்னமாக அறிவிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. "மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் மலையை, "தொல்லியல் சின்னமாக, விரைவில் அறிவிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.