பதிவு செய்த நாள்
15
நவ
2013
10:11
பழநி: பழநி மலைக்கோயிலில் நவ., 17 அன்று, கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, தங்கரதப்புறப்பாடு நிறுத்தப்படும். கார்த்திகை தீப விழா, பழநியில் நவ.,11 முதல் 17 வரை நடக்கிறது. நவ.,17 ல், திருக்கார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் நடை, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். பகல் 2 மணிக்கு, சண்முகர் தீபாராதனை நடக்கும். வழக்கமாக, மாலை 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை, மாலை 4 மணிக்கே நடத்தப்பட்டு, சின்னக்குமார சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். மலைக்கோயில் நான்கு பக்கமும் தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6 மணிக்குமேல், திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்படுவதால், தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். கார்த்திகை விழாவை முன்னிட்டு, நேற்று பழநி மலைக்கோயிலில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.