கும்பகோணம்: தெய்வத்தன்மை கொண்ட பசுக்களுக்கு தமிழகத்தில் தற்போது கோமாரி எனும் நோய் பரவலாக தாக்கி வருகிறது. இதனால் எண்ணற்ற பசுவினங்கள் மடிந்து வருவதால் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் இன்று (நவ.15ல்)நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டில் ஒவ்வொரு கிராமத்திலுள்ள சிவாலயத்தில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடும், பிரார்த்தனையும் செய்யபடுகிறது. மேலும் கோயிலில் காப்பரிசி, பழங்கள், அருகம்புல் உள்ளிட்ட பிரசாதங்களை பசுக்களுக்கு கொடுத்து வழிபடவும் இறைபணி திருக்கூட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.