பதிவு செய்த நாள்
16
நவ
2013
11:11
சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, காலை, 9:15 மணிக்கு புறப்பட்டு மாலை, 3:15 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலில், எட்டு முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, வேலூர் கன்ட்டோன்மென்ட், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.