பதிவு செய்த நாள்
16
நவ
2013
11:11
பொதட்டூர்பேட்டை:திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜா கோவில் கும்மபாபிஷேகம், நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பொதட்டூர்பேட்டை ஆறுமுகசாமி மலையடிவாரத்தில், திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜர் கோவில் உள்ளது. கடந்த, நான்கு ஆண்டுகளாக, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்ததையடுத்து, கும்மபாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கடந்த புதன்கிழமை, யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, புதிய சிலைகளின் கரிக்கோலம், பிம்ப சுத்தி, யந்திர ஸ்தாபனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, 8:00 மணியளவில், யாகசாலையில் இருந்து, புனிதநீர், கலசங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, கோவில் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.மூலவர் தர்மராஜா மற்றும் திரவுபதியம்மனுக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாணமும் நடந்தன. இரவு, 7:00 மணியளவில், அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.