உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியிலுள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ”வாமி வீதியுலா நடந்தது.உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் வரசக்தி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, 10 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம், காலை 10.10 மணிக்கு மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.10.15 மணிக்கு வரசக்தி விநாயகருக்கு தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது.