திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் சாந்தி மலையில் அய்யப்ப சாமி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் கலச தேவத அனுக்நை, விக்னேஷ்வர பூஜை, ந கோ பூஜை, தீபாராதனை நடைபெற்றன. அதன்பின் மகாபூர்ணாவூதி, யாத்திரா தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கலசங்களில் நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.