திருச்சி மலைக்கோட்டை கோவில் உச்சியில் கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 12:11
தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக நாளை மாலை 5 மணிக்கு மலைக்கோட்டையின் நடு பகுதியில் உள்ள தாயுமான சுவாமி கோவிலிலிருந்து செவ்வந்தி விநாயகர், தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகள் புறப்பாடாகி உச்சிமலைக்கு எழுந்தருளி உச்சிப்பிள்ளையார் கோவில் முன்பு உள்ள கார்த்திகை தீப கோபுரத்தை பார்க்கின்றனர். மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் பிரமாண்ட செப்பு கொப்பரையில் 6,000 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 1,000 லிட்டரில் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை மற்றும் நெய் ஆகியவை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.