கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. மாலையில் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதியில் நாராயணி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முருகன் சன்னிதி முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தென்காசி சுவாமி சன்னிதி பஜாரிலும், அம்பாள் சன்னிதி பஜாரிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனையும், சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.