திருவதிகை சிவன் கோயிலில் கிரிவலம், கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2013 01:11
சிவபெருமான் வீரதீர செயல்கள் புரிந்த அஷ்ட தலங்களில் மூன்றாவது தலமான திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமி கிரவலம் மற்றும் கார்த்திகை தீப விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பழைமை வாய்ந்த இக் கோயிலில் மாதம்தோறும் பெüர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறும். இந்த ஆண்டு பெüர்ணமியும் கார்த்திகை தீபமும் ஒரே நாளில் வந்ததால் கிரிவலமும், அதைத் தொடர்ந்து கார்த்திகை தீப விழாவும் நடைபெற்றன. கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாட வீதியை 16 முறை சுற்றி வந்தனர். அப்பர் இல்லம் அறக்கட்டளை சார்பில் பரத நாட்டியம், சொற்பொழிவு நடைபெற்றது. வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனையும் நடைபெற்றது. பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, ராஜகோபுர உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.