போடி மலைக் கோயிலில் ரூ.30 லட்சம் செலவில் கிரிவலப்பாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2013 12:11
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக போடி பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 2-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இக்கோயிலில் சிவலிங்கம், லட்சுமி நாராயண பெருமாள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரஹ தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் பெüர்ணமி, பிரதோஷ காலங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்கு வருவதன் மூலம் திருவண்ணாலை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இக்கோயிலில் கிரிவலப்பாதை அமைத்து தரும்படி பக்தர்கள் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி இக்கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1.6 கி.மீ. சுற்றளவிற்கு கிரிவலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 8 இடங்களில் சிவலிங்கமும் அமைக்கப்பட உள்ளது.