விழுப்புரம்: பொய்யாபாக்கம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபம் பெருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் 500 அகல் விளக்குகளும், ராஜ கோபுரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோவிலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாளுக்கு சகஸ்நாம அர்ச்சனை, தினம் நித்யபூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியர்கள் ஸ்ரீதர், ரங்கராஜன், சீனுவாசன் உட்பட உபயதாரர்கள் வெங்கடேசன், பாலாஜி, அர்ச்சுனன், நாராயணசாமி, ராமலிங்கம் செய்தனர்.