தன் நாட்டில் உள்ள ஓர் இந்துக் கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக தென்னாப்பிரிக்க அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. டர்பன் நகரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணியசுவாமி கோயில்தான் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நூற்றாண்டு விழாவைக் கண்டுள்ள திருக்கோயில் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்.