மதுரை: தொல்லியல் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, நவ., 25 வரை, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மதுரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறுகையில், ""வெளிநாட்டினர் உட்பட அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம். மகாலில் போட்டோ, வீடியோ எடுக்க வழக்கம் போல் கட்டணம் செலுத்த வேண்டும். மகாலை இலவசமாக பார்க்கும் வாய்ப்பினை அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார். பாதுகாப்பு அலுவலர் பொன்.சேதுபதி மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.