பந்தலூர்: உப்பட்டி பெருங்கரையில் பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 15ம்தேதி துவங்கியது. 17ம்தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம்கால வேள்வி நடந்தது. 8:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் நடந்ததுடன், 48 நாட்கள் மண்டல பூஜையும் நடந்து வருகிறது. பூஜைகளை சிவலிங்கம் குருக்கள் செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.