மதுராவிலிருந்து முப்பதாவது கிலோ மீட்டரில் கோவர்த்தனகிரி உள்ளது. இங்கு பரிக்கிரமா ரொம்ப விசேஷம். கோவர்த்தன மலையை கிரிவலம் வருவதுதான் பரிக்கிரமா! சிலர் தீவிரமாக சிறிய இடைவெளிகளில் கல் வைத்து நமஸ்காரங்கள் செய்தபடியே மொத்த தூரத்தையும் கடப்பது வியப்பை வரவழைக்கிறது. இந்த கிரிவலம் சுமார் 16-20 கிலோ மீட்டர்.