மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே, ஹயக்ரீவருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இவருக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், அர்ச்சனை செய்து வழிபட கல்வி ஞானம் பெறலாம். புதன்கிழமைகளில் கல்கண்டு நைவேத்தியம் செய்து. துளசி மாலை சார்த்தி வழிபட, தொழில் சிறக்கும். ஸ்ரீஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட, நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.