பதிவு செய்த நாள்
21
நவ
2013
11:11
நாமக்கல்: முக்கிய கோவில்களில், இரவு நேர பாதுகாப்பு பணிக்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில், இரவு பாதுகாப்பு பணிக்கு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸார், தலைமை போலீஸார் பணியிடங்கள், 14 காலியாக உள்ளன. மாதந்தோறும் தொகுப்பூதியத் தொகை, 5,160 ரூபாய் வழங்கப்படும். கோவில் பாதுகாப்பு பணியில் சேர விருப்பம் உள்ள, 62 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்களின் பணி விடுப்பு சான்றிதழுடன், அலுவலக நாட்களில், மாவட்ட போலீஸ் எஸ்.பி., முன் நேரில் ஆஜராகி விண்ணப்பம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.