சித்தலூர் கோவிலில் ரூ.7.80 லட்சத்தில் வெளி பிரகார மண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2013 11:11
தியாகதுருகம்: சித்தலூர் கோவிலில் 7.80 லட்சம் ரூபாய் மதிப்பில் வெளிப் பிரகார மண்டபம் கட்டும் பணி துவங்கியது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் மணிமுக்தா ஆற்றின் கரையில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் இரு ஆண்டுகளுக்கு முன் புணரமைக் கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. வசந்த மண்டபம் கட்டப்பட்டு அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. கொடிமரம் அமைந்துள்ள வெளிபிரகார கல்மண்டபம் பலவீனமடைந்ததால் புதிதாக கட்ட நடவடிக்கை எடுத்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் காந்தி என்பவர் தனது செலவில் ரூ. 7.80 லட்சம் ரூபாய் மதிப்பில் வெளி பிரகார மண்டபத்தை கட்டித் தருகிறார். இதற்கான பணி நேற்று முன்தினம் துவங்கியது. உளுந்தூர்பேட்டை அறநிலையத்துறை ஆய்வாளர் சுதாகரன், பொறியாளர் காத்தவராயன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பலமிழந்த கல்மண்டபம் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது. பின், வெளிபிரகார மண்டபம் கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படுகிறது.