மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2013 02:11
திருவாரூர்: மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்றுமுன் தினம் (18–ந் தேதி) இரவு விமரிசையாக நடைபெற்றது. கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபாலசுவாமின் கோவிலின் பெருமாள் சன் னதியில் இருந்து உற்சவர் புறப்பாடு நடைபெற்றது. ருக்மணி, சத்யபாமா சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் ராஜ கோபாலசுவாமி வாகனத்தில் ராஜகோபுரம் அருகே எழுந்தருளினார். அதேபோல் தாயார் சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் வாகனத் தில் புறப்பட்ட செங்கமலத் தாயார் ராஜகோபுரம் எழுந்த ருளினார். அப்போது அங்கு சிறிய சொக்கப்பனை ஏற்றப்பட்டது.