புதுச்சேரி: வில்லியனூரில் இன்று (22ம் தேதி) ஐயப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடக்கிறது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 38ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் 13ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா இன்று (22ம் தேதி) துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. வரும் டிச., 19ம் தேதி காலை ஐயப்ப சுவாமிக்கு பஜனை, மாலை 6:30 மணிக்கு சிறுமிகள் விளக்கு தீபத்துடன் சுவாமி வீதி உலா, இரவு 9:30 மணிக்கு அம்பல ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஏகாம்பரம் குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்துள்ளனர்.