ஊத்தங்கரை: ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.10 லட்சத்தில் தியான மண்டபம் அமைப்பதுக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது. ஊத்தங்கரை அருகே 100 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோயில் முன் தியான மண்டபம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ வித்தியா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வே.சந்திரசேகரன் தலைமையில் ரூ. 10 லட்சத்தில் முன்புறம் தியான மண்டபத்துகான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.