பழமைவாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2013 04:11
சின்னசேலம்: சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பியில் சங்காபிஷேகம் பூஜை சிறப்பாக நடந்தது. சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பியில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. காகபுஜண்ட சித்தர் பிரதிஸ்டை செய்த ஆலயம் ஆகும். கார்த்திகை மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. திருக்கயாலத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள புன்னிய தீர்த்தங்கள் அனைத்தும் கலந்து அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பூஜைகள் நடந்தது. மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். செல்வங்கள் உயரவும், 16 வகையான செல்வங்கள் தடையில்லாமல் கிடைக்கவும் சங்காபிஷேகம் பூஜை செய்யப்பட்டது. 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒரு சங்காபிஷேகம் பார்த்தால் நீங்கும் என்பது ஐதிகமாகும். சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.