பதிவு செய்த நாள்
26
நவ
2013
11:11
திருத்தணி: மகா பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அகத்தீஸ்வரர் கோவிலில், பைரவருக்கு, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, மகா பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கால பைவரருக்கு, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.இதையொட்டி, கோவில் வளாகத்தில், இரண்டு யாக சாலை, ஒன்பது கலசங்கள் அமைத்து, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, ருத்ர ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, கார்த்திகை மாதம், இரண்டாம் திங்கட்கிழமையை முன்னிட்டு, மூலவர் அகத்தீஸ்வரருக்கு, ஒன்பது கலசங்கள் அமைத்து சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.இதில், தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.