செண்பகனூரில் உள்ள காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொடைக்கானல் அருகே பழங்கால கோயிலான காலபைரவர் கோயிலில் காலபைரவருக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பழ அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், தீப வழிபாடு, மற்றும் பாகற்காய்,பூசணிக்காய் ஆகியவற்றில் தீப வழிபாடு உள்ளிட்ட பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.