மண்டல பூஜை அன்று ஐயப்பனுக்கு 420 பவுன் எடையிலான தங்க அங்கி அணிவிக்கப்படும். இந்த அங்கி ரான்னி கிருஷ்ணர் கோயிலில் இருந்து புறப்படும். இந்த கோயில் சபரிமலையின் அருகிலேயே உள்ளது. உங்கள் சபரிமலை விசிட்டிங்கின் போது தவறாமல் ரான்னி கிருஷ்ணரையும் தரிசித்து வாருங்கள். ஐயப்பனின் தந்தை சிவன். அன்னை கிருஷ்ணர். இவரே மோகினி அவதாரம் எடுத்து சிவனுடன் ஐயக்கியமாகி, ஐயப்பனைப் பெற்றெடுத்தார். தன்னைப் பெற்ற தாயின் கோயிலுக்கு தான் அணியப்போகும் ஆபரணங்களை அனுப்பி, ஆசிர்வாதம் பெற்ற பின்னரே ஐயப்பன் அணிந்து கொள்கிறார். ஐயப்பனின் தங்க அங்கியும் இந்தக் கோயிலிலிருந்தே புறப்படுகிறது. அந்தக்கோயில் தான் ரான்னி கிருஷ்ண பகவான் கோயில். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் போது இங்கும் போய் வாருங்களேன்.
பெருநாடு சாஸ்தா கோயிலில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. ரான்னி மேஜர் ராமபுரம் கிருஷ்ணன்கோயில், என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பாதையில் இந்த கோயில் அமைந்துள்ளதால் மண்டல, மகரவிளக்கு சீசனில் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். காலை 5.30 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் நடைதிறந்திருக்கும். மண்டலபூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி இந்த கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. முக்கியமாக பால்பாயாச வழிபாடு நடக்கிறது. ஆவணி மாதம் அஷ்டமி ரோகிணி தினத்தில் இங்கு கோகுலாஷ்டமி சிறப்புதிருவிழா நடக்கிறது.