காவிரி கடை முக தீர்த்தவாரி- பாதுகாப்பு பணியில் 280 போலீசார்- எஸ்.பி.ஸ்டாலின்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2025 08:11
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று எஸ்.பி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி நதியை போற்றும் வகையில் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரியின் போது மயிலாடுதுறை திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகளுடன், சுவாமி, அம்பாள் துலா கட்டத்தில் எழுந்தருள காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி மாதப்பிறப்பு மற்றும் இம்மாதம் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடை முக தீர்த்தவாரி நாளை 16ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கடை முக தீர்த்தவாரி நாளை நடைபெற உள்ளது. மதியம் 2 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறும் அப்போது காவிரியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது கடந்த காலங்களை விட கூடுதலாக 280 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடந்த காலங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது இவ்வாண்டு அதனை தடுக்க ஆண் காவலர்களுடன் பெரும் எண்ணிக்கையில் பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் மேலும் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும் ஈகிள் வாகனம் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.
என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம். தவிர நீச்சல் வீரர்களுடன் படகு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம் அதனை மீறி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு படை மருத்துவம் நகராட்சி ஆகியவற்றினுள் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளோம் தேவைப்பட்டால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார். பேடியின் போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் இருந்தனர்.