கோயிலில் பால் வடியும் வேப்பமரம்: பொதுமக்கள் பக்தி பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2013 11:12
சேரன்மகாதேவி: சேரன்மகாதேவியில் கோயில் வேப்பமரத்தில் தொடர்ந்து பால் வடிந்து வருவதால் பொதுமக்களிடையே பக்தி பரவசம் எழுந்துள்ளது. சேரன்மகாதேவியில் உள்ள மாவடித்தெருவிற்கு நுழையும் வழியில் சுடலைமாடசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பீடத்தின் அருகே பழமைவாய்ந்த வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரக்கிளையிலிருந்து பல நாட்களாக பால் வடிந்து கொண்டிருந்தது. இதனை கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சென்று பார்த்த வண்ணம் வந்ததோடு மட்டுமல்லாமல் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். மரத்தின் மூன்று கிளைகளிலும் பால்வடிந்து வருவதை திரளாக சென்று பார்த்து வருகின்றனர்.