பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
பொள்ளாச்சி: கப்பளாங்கரை முத்து மாரியம்மன், விநாயகர் கோவில், மகா கும்பாபிஷேக விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி கப்பளாங்கரை விநாயகர், முத்துமாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா வரும் 11ம் தேதி மாலை 5:00மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. வரும் 12ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தேவபாராயணம், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும்; மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, நவசக்தி அர்ச்சனை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கின்றன. தொடர்ந்து, 13ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது. காலை 6:45மணிக்கு கலசம் புறப்படுதல், காலை 7:00 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், காலை 7:15 மணிக்கு விநாயகர் கும்பாபிஷேகம், காலை 7:30மணிக்கு மாரியம்மன் கும்பாபிஷேகம், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும்; அன்னதானமும் நடைபெறுகிறது.