பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
உடுமலை: சோமவாரப்பட்டி வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், மழை வேண்டி, சிறப்பு பூஜைகள் நாளை (7 ம் தேதி) நடக்கிறது. உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நாளை நடக்கிறது. காலை 5:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, கோவில் திருவாய் மொழி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகிய வழிபாடுகளும், மாலை 3:00 மணிக்கு மேல் மழை வேண்டி சிறப்பு யாகம், சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் தீபாரதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6:30 மணிக்கு திருப்பணிக்குழு ஆலோசனை கூட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர்கள், திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.