புதுச்சேரி: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அய்யங்குட்டிப்பாளையம், அமைதி நகரில் அமைந்துள்ள, ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவில், அமைதி நகர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.