Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தூய சவேரியார் ஆலய தேர் பவனி! சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்! சின்னமாரியம்மன் கோவில் குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2013
10:12

குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா இன்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. குற்றாலம் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் கோயில் சித்திர சபையில் உள்ள நடராசபெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை திருவிழா இன்று (9ம் தேதி) காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து அப்பர் திருவுலா உழவாரப் பணியும் இரவு சுவாமி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. தொடர்ந்து நாளை (10ம் தேதி) காலை, இரவு சுவாமி அம்பாள் வெள்ளிச் சப்பரத்திலும், 11ம்தேதி சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும், 12ம்தேதி இரவு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. 13ம்தேதி காலை 8.20 மணிக்கு நடராசர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 14ம்தேதி சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்னம் வாகனத்திலும், 15ம்தேதி நடராசர் வெள்ளை சாத்தியும், 16ம்தேதி காலை பச்சை சாத்தி, தாண்டவ தீபாராதனையும் இரவு பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. 17ம்தேதி இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல் நடக்கிறது. 18ம்தேதி அதிகாலை 4 மணிக்கு சித்ர சபையில் நடராசர் ஆருத்ரா தரிசன தாண்ட தீபாராதனையும், 5.20 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar