பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
ஈரோடு: ஈரோடு சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று குண்டம் விழாவும், தேரோட்டமும் நடந்தது. ஈரோடு கருங்கல்பாளையத்தில், சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு சின்னமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 26ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. நேற்றைய தினம், குண்டம் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு நகரின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கோவில் பூஜாரி சிதம்பரம், ராஜா ஆகியோர் குண்டம் விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கினர். விழாவை ஒட்டி சின்னமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குண்டம் விழாவை தொடர்ந்து, பக்தர்கள் வடம் பிடிக்க, தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர், முக்கிய வீதிகளின் வழியாக, வலம் வந்து, பொதுமக்கள் தரிசனத்துக்கு பின், நிலைக்கு வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.