பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
விருதுநகர்: விருதுநகர், பாண்டியன் நகர், தூய சவேரியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆலய திருவிழாவை, நவ., 29ல், பாதிரியார்கள் எஸ். ஞானபிரகாசம், ஜோசப் ராஜசேகர், எஸ்.எப்.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வர் எட்வர்டு, பொருளாளர் வின்சென்ட் சகாயராஜ் ஆகியோர், தூய சசேவரியார் திருஉருவம் பொறித்த கொடியை ஏற்றி துவங்கி வைத்தனர். அதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், "குடும்ப வாழ்வும் இறை அழைத்தலும் என்ற தலைப்பில் மறையுரை நடைபெற்றது. தினமும் திருப்பலி, குடும்பம் என்ற தலைப்பில் மறையுரை நடந்தது. திருவிழாவின் 9ம் நாள், மாலை 6. 30 மணிக்கு, புனித பிரான்சிஸ் டீ சேல்ஸ் சபையின் தென்கிழக்கு மாநில சபை தலைவர் தர்மராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, தூய சவேரியார் திரு உருவம் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்து தேர் பவனி நடந்தது. இது ஆலயத்திலிருந்து புறப்பட்டு ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம், தேவர் சிலை, பாண்டியன் நகர், கே.கே.எஸ்.எஸ்.என் நகர் வழியாக சென்று ஆலயம் வந்தடைந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.