பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
பொங்கலூர்: கொடுவாயில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, மஹா சங்கல்பம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், யாக பூஜை, 108 திரவிய யாகம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. காலை 6.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை, கொடுவாய் நாகேஸ்வர சிவாச்சார்யார், அவிநாசி அமர்நாத் சிவாச்சார்யார் ஆகியோர் நடத்தி வைத்தனர். 8.00 மணிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சண்முகம் தலைமையிலான விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.