புதுச்சேரி: மண்ணுருட்டி சுவாமி சித்தர் பீடம் நன்னீராட்டு விழாவில், 1008 சிவ பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது.தென்னஞ்சாலைரோடு கண்ணன் நகரில் உள்ள மண்ணுருட்டி சுவாமிகள் சித்தர் பீடத்தில் நேற்று காலை திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து அருளாளர்கள் அருளுரை, பதின்மங்கலாட்சி, திருமஞ்சனம் நடந்தது.நன்னீராட்டு விழாவையொட்டி, மார்கண்டேயபுரம் அறக்கட்டளை சார்பில் 1008 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சந்திரசேகரன், ஜெயசங்கர், ஆறுமுகம் உள்ளிடோர், சிவ பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்தனர்.