சின்னசேலம்: சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் கார்த்திகை 4வது சோமவார விழா நடந்தது. சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் பிரகந்தநாயகி உடனான அர்த்தநாரீஸ்வரருக்கு கார்த்திகை மாத 4வது சோமராவத்தை முன்னிட்ட 108 சங்காபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியை திருமுருகன் தெய்வீக பேரவையினர் செய்தனர்.தென்பொன்பரப்பி சொர்ணாமிகை உடனான சொர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் பெரியநாயகி உடனான சொர்ணபுரீஸ்வரர் கோவில், அசல குசலாம்பிகை உடனான பஞ்சாட்ச நாதருக்கும், குரால் புவனேஸ்வரி உடனான புவனேஸ்வர் கோவிலில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.