தென்காசி: தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று (12ம் தேதி) கடைசி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கிறது.தென்காசி- ஆய்க்குடி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் இன்று (12ம் தேதி) கார்த்திகை மாத கடைசி வியாழக்கிழமையை முன்னிட்டு நான்கு வேலைகளும் சிறப்பு ஆரத்தி நடக்கிறது. மாலையில் அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை சுப்புலட்சுமி துரைசாமி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.