விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2013 03:12
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் 10ம் ஆ ண்டு ஆருத்ரா தரிசன பெருவிழா வரும் 18ம்தேதி நடக்கிறது. இதில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ்சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ரத்ரபாதம் காட்டி விளமலில் அருளியதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு திருவடிக்காட்டி அருளியது ஆருத்ரா தரிசனம் என உலகெங்கும் கொ ண்ட õடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது 10 ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 18ம்தேதி நடக்கிறது. முன்னதாக 17ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகமும், 18ம்தேதி அதி காலை 4 மணிக்கு நடராஜபெருமான்லிங்கத்தில் எழுந்தருளி பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதலும், பின்னர் 4.45 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் தியாகராஜர்கோவிலுக்கு செல்லுதலும், காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவாதிரை நாளில் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு தியா கேசப் பெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இறைவன் அர்த்த நாரீஸ்வரராக இருக்கும் போது இடது பாகம் தியின் பாதம் ஆனதால் இட து பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக தடைபடும் திருமணம் புத்திரபாக்கியம் இல்லாமை போன்றவற்றை நீக்கி பூரண நலமும் செல்வ செழிப்பும் அருளுவது இடது பாத தரிசனம் ஆகும் இதில் பங்கேற்க 9489479896 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.