ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நீராடும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.4.50 லட்சத்தில் நிரந்தர பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களில் நீராட, பக்தர்கள் திறந்த வெளியில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். வெயில், மழை காலத்தில் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, கோயில் நிர்வாகம் ரூ.4.50 லட்சத்தில், கோயில் கிழக்கு ரதவீதியில் இரும்பு வளைவு அமைத்து, அதன் மீது அலுமினிய ஷீட்டில் கூரை அமைக்க உள்ளனர். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், ""இப்பணி ஒரிரு நாளில் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும், என்றார்.