பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்கள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியலில், 1.58 கோடி ரூபாய், காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி முடிந்ததும், கோவில் மற்றும் கிரிவல பாதையில் உள்ள உண்டியல்களை திறந்து, காணிக்கை எண்ணுவது வழக்கம். கார்த்திகை தீப திருவிழா நடந்து முடிந்ததையடுத்து, அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், உண்டியல் கணிக்கை எண்ணும் பணி துவங்கியது. இப்பணியில், பள்ளி மாணவர்கள் உள்பட, 200 பேர் ஈடுபட்டனர். இதில், ரொக்கமாக, 1.58 கோடி ரூபாயும், 1,363 கிராம் தங்கமும், 1,005 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. கடந்த ஆண்டு தீப திருவிழா உண்டியல் காணிக்கையாக, 1.33 கோடி ரூபாய் கிடைத்தது.