திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச., 16 முதல் அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடைசாத்தப்படும். மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி பூஜையும் நடக்கிறது.