ராமநாதபுரம்: வாலாந்தரவை வாழவந்த அம்மன் கோயிலில் சித்தி விநாயகர், வாழவந்த அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரக் கலசங்களில் பூனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வாலாந்தரவை பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.